Breaking News

கருப்பான கைகளை வெள்ளையாக்குவதற்கான சில டிப்ஸ்…

கருப்பான கைகளை வெள்ளையாக்குவதற்கான சில டிப்ஸ்…
அழகான கைகளும் ஒருவரது தோற்றத்தை அதிகரித்துக் காட்டும். எப்படி முகத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுப்போமோ, அதேப் போல் கைகளுக்கும் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம்.
கைகளின் அழகை அதிகரிக்க ஒருசில செயல்களை தினமும் மேற்கொண்டால், கைகளில் உள்ள கருமையைப் போக்கலாம். வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்தாலே போதும். கைகளில் உள்ள கருமையைப் போக்கி, கைகளை வெள்ளையாக்குவதற்கான சில டிப்ஸ் பார்க்கலாம்…
எலுமிச்சை மற்றும் சர்க்கரை:
எலுமிச்சை மற்றும் சர்க்கரை கலவை ஒரே வாரத்தில் சருமத்திற்கு நல்ல நிறத்தை அளிக்கும். அதற்கு 2 ஸ்பூன் சர்க்கரையில், பாதி எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து ஊற்றி, அதனை கைகளில் தடவி மென்மையாக 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும். அதன் பின் 5 நிமிடம் கழித்து நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.
பால், எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய்:
ஒரு பௌலில் 4-5 ஸ்பூன் பால் எடுத்து, அதில் 2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு மற்றும் 8-10 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அந்த கலவையை கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும் 10 நிமிடம் நன்கு ஊறிய பின், இறுதியில் நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.
பப்பாளி:
இரண்டு பப்பாளிக் காய் துண்டை எடுத்து, அதன் மென்மையான உட்பகுதியால் கைகளை 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 1-2 நிமிடம் கழித்து, சுடுநீரில் நனைத்த துணியால் கைகளைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், கைகளில் உள்ள கருமை மறையும்.
ஆரஞ்சு தோல்:
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி பொடி செய்து கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பௌலில் ஆரஞ்சு தோல் பொடியை எடுத்து, மாட்டுப் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். அதன் பின் அந்த கலவையை கருமையாக உள்ள கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி 5 நிமிடம் மென்மையாக தேய்த்து, ஈரத்துணியால் துடைத்து எடுங்கள்.

No comments