*🇱🇰தரம் 5 பரீட்சைக்குப் பதிலாக தரம் 7,8 இல் புதிய பரீட்சை🇱🇰*
👨🎓 பட்டம் பெற்று நடுத்தெருவில் போராட்டம் நடத்தும் நிலையை மாற்ற வேண்டும் என்கிறார் ஜனாதிபதி👨🎓
- வளர்ச்சியடைந்த நாடுகள் பின்பற்றும் கல்வி முறைக்கு யோசனை
*புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதன் ஊடாக* உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் பின்பற்றப்படும் கல்வி முறைகளுக்கு ஏற்றவகையில் எமது நாட்டின் கல்வித்துறையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவோமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொடகம சுபாரதி மகா வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (01) பிற்பகல் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பதிலாக 07 அல்லது 08ஆம் தரத்தில் பரீட்சை ஒன்றினை நடத்தி அப்பெறுபேறுகளுக்கமைவாக மாணவர்களின் திறமைகளுக்கேற்ப ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் மாணவர்களை நெறிப்படுத்தும் வகையில்
கல்வியியலாளர்களின் வழிகாட்டலில் அப்புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதுடன், அதற்கமைய மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணிதவியலாளர்கள், விவசாய நிபுணர்கள், தொழிநுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட துறைகள் வரை பிள்ளைகள் உயர்கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இதனூடாக கிடைக்குமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
No comments