இஸ்ரேலை சேர்ந்த 5 வயது குழந்தை இணையத்தில் பிரபலமாகி வருகிறது
சர்வதேச செய்திகள்:இஸ்ரேலை சேர்ந்த 5 வயது சிறுமி தன்னுடைய நீளமான கூந்தலால் இணையத்தில் மிகவும் பிரபலமாகி உள்ளார்.
இஸ்ரேலை சேர்ந்த 5 வயது சிறுமியான மியா அவ்லாளோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 50ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். அவருடைய நீளமான கூந்தலும், அழகான கண்களும் அவருக்கு இன்னும் அழகை கூட்டுவதாக உலகம் முழுவதிலும் உள்ள பொதுமக்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டின் மிகவும் பிரபலமான முடி ஒப்பனையாளர் சகி தஹரி தான் ஒருமுறை, இங்கிலாந்தின் புகழ்பெற்ற இதழ் ஒன்றிற்காக சிறுமியை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அன்று முதல் மிகப்பெரிய நட்சத்திரமாக சிறுமி வளர்ந்துவிட்டார்.
இதுகுறித்து சகி தஹரி கூறுகையில், மியாவுடன் வேலை செய்வது மிகவும் எளிதானது. பொறுமையாக சிரித்துக்கொண்டே அமர்ந்திருப்பார் என தெரிவித்துள்ளார். அதேசமயம் தான் மியாவை எப்பொழுதும் “இளவரசி மியா” என்று தான் அழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மியாவின் முடி என்னுடைய முடியை விட அழகாக இருப்பது எனக்கு பெரிய வருத்தத்தை தருகிறது என பெண் ஒருவர் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபோன்று மியாவிற்கு ஆதரவாக ஏராளமானோர் கருத்து தெரிவித்தாலும், எதிர்ப்பு தெரிவித்தும் ஒரு சிலர் கருத்து பதிவிட்டுள்ளார். சிறுவயதில் குழந்தைகளை விளையாட விட வேண்டும். உங்களுடைய ஆசைக்காக குழந்தையை இப்படி மாடலிங் செய்ய விடக்கூடாது. எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் நான் இப்படி செய்திருக்க மாட்டேன் என சில பெண்கள் பதிவிட்டுள்ளனர்.
No comments