இரண்டு பொலிஸ் குழுக்கள் அம்பாறை விரைவு ; அஸாத் சாலி
z
அமைச்சர் ராஜித்த சேனாரத்தினா மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் இதுதொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கவனத்திற்கு கொண்டு சென்றதாக ஆசாத் சாலி கூறியுள்ளார்.
அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் பற்றி ஆராய்வதற்காக 2 பொலிஸ் குழுக்கள் இன்று வெள்ளிக்கிழமை (2) அம்பாறைக்கு சென்றுள்ளன.
சிங்கப்பூரில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ்மா அதிபருக்கு வழங்கிய உத்தரவின் பேரிலேயே இக்குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த 2 குழுக்களும் அம்பாறை வன்முறை தொடர்பிலும், அதனுடன் தொடர்புடையவர்கள், வன்முறைக்கான காரணம், அதன் பின்னணி, அம்பாறை பொலிஸாரின் செயற்பாடு பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments