Breaking News

ரஜினி, கமலுக்கு மேடையில் பதிலடி கொடுத்த பிரபல நடிகர்



நடிகர் ரஜினி அரசியல் முடிவை கடந்த புதுவருட தினத்தில் அறிவித்தார். தேர்தலை எதிர்கொள்வதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.


அதே நேரத்தில் நடிகர் கமல் ஹாசன் மதுரையில் மாநாடு நடத்தி கட்சியின் பெயரையும் அறிவித்து வேகமாக களத்தில் இறங்கிவிட்டார். இதனால் பலரும் பிரம்மிப்பு அடைந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் அதிமுகவின் அரசியல் விழா ஒன்றில் நடிகர் ராமராஜன் கலந்துகொண்டு பேசினார். அதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் உடனே முதலமைச்சர் ஆகிவிடவில்லை.

மக்களுக்காக நிறைய பாடுபட்டிருக்கிறார்கள். இப்போது புதிதாய் கட்சி தொடங்கியவர்கள் உடனே முதலமைச்சர் ஆகிவிடலாம் என கனவு காண்கிறார்கள். அவர்கள் உடனே ஜொலித்துவிட முடியாது.

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களுக்கு தகுந்த முன் அனுபவங்கள் தேவை என கூறினார்.

No comments