ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 10 ஓட்டங்களால் வெற்றி
இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் நேற்று இடம்பெற்ற 6வது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 10 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
டெல்கி டெயார் டெவர்ல்ஸ் அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டி ஜெய்பூரில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்கி டெயார் டெவர்ல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 153 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது.
அதனைத் தொடர்ந்து, டெல்கி டெயார் டெவர்ல்ஸ் அணிக்கு 6 ஓவர்களில் 71 ஓட்டங்கள் என்று வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
எனினும் டெல்கி டெயார் டெவர்ல்ஸ் அணி 6 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.
No comments