ஜப்பானில் வசூல் வேட்டை நடத்தும் பாகுபலி-2 !!
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான'பாகுபலி 2' படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து பாரிய வரவேற்ப்பை பெற்றிருந்தனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளிலும் இந்தப் படம் வெளியானது.
1500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த முதல் இந்தியப் படம் என்ற பெயரைப் பெற்றது.
1500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த முதல் இந்தியப் படம் என்ற பெயரைப் பெற்றது.
இந்த நிலையில், 'பாகுபலி 2', ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 29ம் திகதி வெளியானது.
இந்த படம் அங்கு 100 நாட்களைக் கடந்து இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 15வது வாரத்தின் முடிவில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலரை இந்த படம் வசூலித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.
No comments