Breaking News

சிறுநீரக கோளாறு வருவதற்கு முக்கிய காரணம்!. அதை தடுக்கும் வழிமுறைகள்!.

Image result for kidney in human body
மருத்துவம்:தற்போதைய வாழ்க்கை முறையில் சிறுநீரக கோளாரால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது எதனால் ஏற்படுகிறது, இதனை தடுக்க என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது. மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு முக்கியமாக சிறுநீரக பாதிப்பு விரைவில் ஏற்படும்.
வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், விஷப் பூச்சிக் கடி, மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் பின் விளைவால் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.
நுரைபோன்ற சிறுநீர் வருவது, இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழிப்பது, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, சிறுநீர் தொற்று ஏற்படுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வருவது போன்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்படுவது.
உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நீரை சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாமல் போகும்போது கணுக்கால், கால், பாதம், கைகள் குறிப்பாக முகத்தில் வீக்கம் அல்லது சிஅடைப்பு ஏற்படும்.
சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது உடலில் கழிவுகள் அதிகமாகச் சேரும். இதனால் தோல்களில் அதிகமான வெடிப்பு மற்றும் தடிப்புகள் உண்டாகும். முகத்தில் வீக்கம் ஏற்படும், மூச்சுத்திணறல் ஏற்படும்.
மூளைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மறதி, கவனமின்மை, தலைசுற்றல் ஆகியவை உண்டாகும். உடற்சோர்வு, அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படும்.
ரத்தசோகை காரணமாக அடிக்கடி குளிர்வது போன்ற உணர்வு தோன்றும். சிலருக்கு வெயில் காலத்தில் தாங்க முடியாத அளவுக்கு குளிர் ஏற்படும்.
சிறுநீரக தொற்று ஏற்படாமல் இருக்க நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பல உள்ளன. குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அசைவம் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்,
போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்,
சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மதுப்பழக்கம் உள்ளவர்கள் முற்றிலும் அதை விட வேண்டும் இல்லாவிடில் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு கூட வாய்ப்பு உண்டு. புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.
சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாஷியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும்.
சிறுநீர் கோளாறு உள்ளவர்கள் இனிப்பு வகையான உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலை வரைக்கும் போனவர்கள் மட்டும் பொட்டாசியம் சத்து உள்ள உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

No comments