Breaking News

சிரியாவில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 42 பேர் பலி

+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+42+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
(Sriya news)

சிரியாவின் கிழக்கு குவோட்டாவில் அரச படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டள்ளனர்.

அங்குள்ள மத்திய பிரதேசத்தில் கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில், சிரிய வான்படையினர் நேற்றைய தினமும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

அத்துடன், கிழக்கு டமஸ்கஸ் பகுதியில் அரச படையினர் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிரியாவின் கிழக்கு குவோட்டா நகரத்தில் கடந்த நாட்களாக இடம்பெற்றுவரும் தாக்குதலில், ஆயிரத்து 99க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதுவரையில் பலியாகியுள்ளதாக, பிரித்தானியாவில் நிலைக் கொண்டுள்ள மனித உரிமை பணியகம் தெரிவித்துள்ளது.

மரணித்தவர்களில் 227 சிறார்களும் 154 பெண்களும் உள்ளடங்குவதாக அந்த அமைப்பின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர குறைந்தது 4 ஆயிரத்து 378 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்படைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ வசதியற்ற நிலையில், பெரும் துன்பத்தை எதிர்நோக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanks HIRU NEWS....

No comments