இறந்த மனிதன் மீண்டும் உயிர்பெற்ற அதிசயம்; மருத்துவ உலகமே அதிர்ச்சியில்!
இறந்த மனிதன் ஒருவர் 18 மணி நேரங்களுக்குப் பின்னர் உயிர் பெற்று எழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 53 வயதான மனிதன் ஒருவரே இவ்வாறு உயிர் பெற்றிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட குறித்த மனிதன் நதிக்கரை ஒன்றில் சுருண்டு விழுந்துள்ளார். இதனால் அவர் ஹைபோர்தேர்மியா எனப்படும் தாழ் வெப்பநிலையால் பாதிக்கப்பட்டார். இருந்தாலும் அவரது இதயம் துடிப்பதிலிருந்து நின்றுவிட்டது.
இதனையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய உறவினர்கள் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். தெற்கு பிரான்சிலுள்ள மான்ட்பெலியர் பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் குறித்த நபரின் உடலம் சேர்க்கப்பட்டது. அங்கே அவரது உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது மூளை சாவடையாமல் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்த நிலையில் குறித்த மனிதனை உயிர்ப்பிக்க முடியும் என நம்பிய மருத்துவர்கள், அதற்கான முயற்சியில் இறங்கினர். இந்த முயற்சியில் இறங்கிய மருத்துவக்குழுவை முட்டாள்தனமானது என அனைவரும் விமர்சித்தனர். ஆனாலும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்சியாக அவருக்கு இயந்திரம் மூலமான நான்கு மணி நேர இதய மசாஜ் செய்யப்பட்டதுடன் நுரையீரல் சுருங்கி விரிவதற்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. அவரது வெப்ப நிலை தாழ்வு மட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்வடைவதைக் கண்ட மருத்துவக் குழுவுக்கு நம்பிக்கை பிறந்தது.
இதன்பின்னர் அவரது இதயம் தானாக இயங்க ஆரம்பிப்பதற்குத் தேவையானா உடல் வெப்ப நிலை அவரது உடலை அடைந்து உயிர் பெற்று எழுந்துள்ளார்.
இந்த அதிசய சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த மருத்துவரான சார்பிட் என்பவர் கூறுகையில், ”53 வயதான அந்த மனிதன் ஒரு நதிக்கரையோரம் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது மூளை சேதமடையாமல் இருந்ததால் அவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.” என்றார்.
இதேவேளை குறித்த நபர், கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி மோன்ஸ்பெலியர் அருகே பெஸியர்ஸில் இருந்த அவரது சகோதரர் வீட்டிலிருந்து திரும்பி வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டிற்குத் திரும்பத் தவறியதனால் அவரது உறவினர்கள் அவரைத் தேடித் தேடி ஒரு நதிக்கரையோரமாகக் கண்டு பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நபரால் தற்பொழுது சுவாசிக்கவும் எழுந்து நடக்கவும் முடியும் என்கிறார், மோன்ஸ்பெலியர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைவரான சேவியர் கேப்டேவின். அவர் மீண்டும் உயிர்பெற்றமையானது இந்த மருத்துவ உலகிற்கு புதிய ஒரு தளத்தினை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
No comments