வெள்ளவத்தை புகையிரதத்தில் மோதி உயிரிழந்த கொழும்பு நபர்.
மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments