Breaking News

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய கண்டி பெண் யாழில் கைது.

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வைத்து கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்வது போன்று நகையகங்களுக்கு செல்லும் குறித்த பெண், நகைகளை பார்வையிடுவது போன்று கொள்ளையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் தொடர்பில் அனைத்து வர்த்தகர்களுக்கும் காவல் துறையினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகையகம் ஒன்றிற்கு வருகை தந்ததோடு தங்க ஆபரணங்களை கொள்ளையிடும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த பெண்ணின் செயல்களை சுதாரித்துக்கொண்ட நகையகத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தின் கதவுகளை பூட்டிவிட்டு காவல் துறையினருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பெண் காவல்துறை அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண் கண்டியை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments