Breaking News

எச்சரிக்கை!! கண்பார்வை குறைப்பாடு ஏற்படும் அபாயம்!!


வரட்சி காலநிலை காரணமாக 6 மாவட்டங்களை சேர்ந்த மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார், கண்டி, புத்தளம், குருணாகல், பொலன்னறுவை மற்றும் அநுராதப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் நிலவுகின்றன.

வரட்சியால் புத்தளம் மாவட்டமே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வரட்சி காரணமாக சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பயிர் செய்கை என்பவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, வரட்சி காலநிலை காரணமாக சுத்தமான குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் கே.ஏ அன்சார் இதனை தெரிவித்துள்ளார்.

குடிநீர் விநியோகத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வரட்சி காரணமாக சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பிரதேசங்களுக்கு நீர்தாங்கிகள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் கடும் வெப்பத்துடனான காலநிலை காரணமாக கண்பார்வை குறைப்பாடு மற்றும் கண்சார்ந்த நோய்கள் ஏற்படக் கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண் தொடர்பான விஷேட நிபுணர்கள் இது தொடர்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.

சூரியன் உச்சம் பெற்றுள்ளமையே இதற்கான காரணம் என கண் தொடர்பான விஷேட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Thanks Hiru News...

No comments