Breaking News

சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட வந்து குழுவொன்று சிக்கியது!!


இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளை மையப்படுத்தி, வட்சப் சமுகவலைத்தளத்தின் ஊடாக சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவந்த குழு ஒன்று இந்திய புலனாய்வுப் பிரிவினரால் பிடிபட்டுள்ளது.

குறித்த குழுவின் தலைவர் இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள கன்னோஜ் பகுதியில் வைத்து கைதாகியுள்ளார்.

கைதானவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான காணொளிகளை பரப்புவதற்காக, அவர் வட்சப் குழுவை நடத்தி வந்துள்ளார்.

இந்த குழுவில் இணைந்திருந்த இலங்கையர்கள் தொடர்பில், இலங்கையின் விசாரணை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி இருப்பதாக இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சீ.பி.ஐ. அறிவித்துள்ளது.
 Thanks Hiru News...

No comments