Murdered by a wife and a maiden husband
மனைவியை நிர்வான படம் பிடித்து மிராடிய கேவலமான கணவன்
தமிழ்நாட்டு செய்தி:கட்டிய மனைவியை ரகசியமாக அவரின் செல்போன் மூலமாகவே, ஆபாசமாக படம் எடுத்து, மிரட்டிவந்த கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் கவிதா {பெயர் மாற்றப்பட்டுள்ளது} 42 வயதான இவர், கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
மருத்துவர் கவிதாவுக்கும் சேலத்தை சேர்ந்த சென்னை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவரான ஒருவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கவிதா சேலம் மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனுவை கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார், அந்த மனுவில் அவர் தெரிவிதிப்பதாவது, ”எனது கணவர் பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு விவகாரத்து கேட்டு என்னிடம் வற்புறுத்தி வந்தார்.
மேலும், சேலத்தை சேர்ந்த ஒரு வக்கீலுடன் சேர்ந்து கொண்டு அவருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்து அந்த செல்போனில் புதிய ஆப்பை இன்ஸ்டால் செய்து எனக்கு தெரியாமல் என்னை ஆபாச படம் எடுத்துவைத்துக்கொடு, விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன், சேலத்தில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த படங்களை பேஸ்புக், வாட்-அப்களில் வெளியிடுவதாகவும் மிரட்டினார்.
பின்னர், நான் விவாகரத்து கொடுத்ததுடன், எனது பெயரில் இருந்த வீட்டையும் எழுதி கொடுத்து விட்டேன். தற்போது ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்கவும், அதனை என்னிடம் ஒப்படைக்கவும் ரூ.10 லட்சம் கேட்பதுடன் அதனை ஏற்காட்டிற்கு கொண்டு வந்து தர வேண்டும் என்றும் மிரட்டி வருகிறார்கள். நாங்கள் சொன்னப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் எனது கணவரும், அந்த வக்கீலும் மிரட்டி வருகிறார்கள். எனவே, அவர்கள் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறி இருந்தார்.
புகார் மனுவை பெற்று கொண்ட கமிஷனர், இந்த மனுவை விசாரித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு சேலம் மாவட்ட கமிஷனர் உத்தரவிட்டார். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், கவிதாவின் கணவரான அரசு மருத்துவர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த வழக்கறிஞர் மீது 4 பிரிவிகளின் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலம் மாவட்ட மக்களை மட்டுமில்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சியாக்கியுள்ளது.
No comments