Breaking News

சுலபமான முறையில் முகப்பருக்களை விரட்ட...!

Image result for corel software coreldraw home & student suite x8

முகப்பருவைப் போக்க ஏராளமானோர், எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். குறிப்பாக முகப்பரு எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிகம்  வரும். சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் இருந்தாலே, பருக்கள் வந்துவிடும்.
கணவாய் மீன் எலும்பை எடுத்துக் கொண்டு, ஒரு கல்லில் தண்ணீர் சேர்த்து தேய்த்து கிடைக்கும் பேஸ்ட்டை முகப்பரு மீது வைத்து உலர வைக்க வேண்டும்.  இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
6 கிராம் உலர்ந்த ஆரஞ்சு தோல், முட்டை ஓடு, பார்லி, கடலைப் பருப்பு, ஸ்டார்ட், பாதாம் கெர்னல் போன்றவற்றை அரைத்து பொடி செய்து கொள்ளவும். பின்  தேவையான அளவு பொடியை எடுத்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது முகப்பரு உள்ள இடத்தில் தடவி இரவு முழுவதும் ஊற  வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், பருக்கள் விரைவில் அகலும்.
 
ஆப்பிளை துருவி, சிறிது தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் போய்விடும்.
 
2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான  நீரில் கழுவ, நல்ல பலன் கிடைக்கும்.
 
பாதாம் பொடியை விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, முகத்தில் பருக்கள் இருந்தால்  சீக்கிரம் போய்விடும்.

No comments