10 km in China Traffic jams for a distance - 5 days after reaching
சீனாவின் ஹைனான் தீவில் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் 10 கி.மீட்டர் தூரத்துக்கு கார்கள் வரிசையாக நின்றன. இதனால், போக்குவரத்தது நிலைமை சீரடைவதக்கு 5 நாட்கள் ஆனது.
சீனாவில் பின்பற்றப்படும் நாட்காட்டியின்படி கடந்த 16-ந்தேதி புத்தாண்டு பிறந்தது. அதையொட்டி அங்கு ஒருவாரம் கொண்டாட்டங்கள் நடந்தன. புத்தாண்டை கொண்டாட சீனாவின் பிரபல சுற்றுலா தலமான ஹைனான் தீவில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். அங்கு தங்கி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொண்டாட்டம் முடிந்ததும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அப்போது தான் அங்கு பிரச்சினையே உருவானது. ஹைனான் தீவில் இருந்து குவாங்டாங் துறைமுகத்துக்கு கடல் வழியாக மட்டுமே வரமுடியும். ஆனால் பனிமூட்டம் காரணமாக ஹைனானில் படகு சவாரி தடைபட்டது.
இதனால் துறைமுகத்தை நோக்கி 50 ஆயிரம் கார்களில் சுற்றுலா வந்தவர்கள் படையெடுத்தனர். அனைவரும் ஒரே நேரத்தில் கார்களில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுமார் 10 கி.மீட்டர் தூரத்துக்கு கார்கள் வரிசையாக நின்றன. இந்த நிலை 5 நாட்கள் நீடித்தது. இதற்கிடையே வானிலை சீரானதும் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் படகில் அனுப்பி வைக்கப்பட்டனர். போக்குவரத்து சீராகாத 5 நாட்களும் சிலர் பகல் மற்றும் இரவு பொழுதை காரிலேயே கழித்தனர்.
10 km in China Traffic jams for a distance - 5 days after reaching
Reviewed by Youth media
on
2/26/2018 11:54:00 AM
Rating: 5

No comments