நாடு முழுவதும் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம்.

நாட்டில் நிலவிய வறட்சியுடனான வானிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு, மேல், ஊவா, மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்களும் கடற்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்றைய வானிலை தொடர்பான மேலதிக தகவல்களை வழங்குகின்றார் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்…..
No comments