இது ஆண்களுக்கான அழகுக் குறிப்புகள்…!!

பெண்களை விடவும் ஆண்கள் தமது அழகின் மீது அதிக அக்கறை செலுத்துவதில்லை. ஆண்கள் தாம் அணியும் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முகத்திற்கு கொடுப்பதில்லை.
அந்த வகையில் ஆண்களுக்கான சில அழகுக் குறிப்புகளை இங்கே தருகின்றோம்.
ஆண்களின் முக அழகிற்கு:
பொதுவாக அதிகமாக வெய்யிலில் சுற்றித்திரிபவர்களாகவே ஆண்கள் இருக்கின்றனர். இவ்வாறு வெளியில் சென்று வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.
ஐஸ் கட்டியை ஒரு துணியில் மூடி ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் முகம் தெளிவடையும்.
சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும். அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும் பன்னீரும் கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடம் ஊற விடவும்.
பின்னர் இளஞ்சூடான நீரில் முகத்தினை கழுவினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும்.
No comments