அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை உதைபந்தாட்டத்தில் ஆதிக்கம்
அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 20வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வயதெல்லையில் ஒலுவில் அல் -ஹம்றா மகாவித்தியாலய அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.கஸ்ஸாலி தலைமையில் இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலய அணியும், ஒலுவில் அல் -ஹம்றா மகாவித்தியாலய அணியும் விளையாடியது.
இதில் 1 -₋ 0 என்ற கோல்கள் அடிப்படையில் அல் -ஹம்றா மகாவித்தியாலய அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அல் -ஹம்றா மகாவித்தியாலய அணியும், இரண்டாமிடம் பெற்ற அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலய அணியும் வலய மட்ட போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதிப் போட்டிக்கு முன்னதாக இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணியும், அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலய அணியும் மோதியது.
இதில் அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலய அணி 1 -₋ 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஒலுவில் அல் -ஹம்றா மகாவித்தியாலய அணியும், பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய அணியும் மோதியது.
இதில் ஒலுவில் அல் -ஹம்றா மகாவித்தியாலய அணி 1 -₋ 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
18 வயதுப் பிரிவு ஆண்கள்
அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வயதெல்லையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணியும், ஒலுவில் அல் -ஹம்றா மகாவித்தியாலய அணியும் விளையாடியது.
இதில் 1 -₋ 0 என்ற கோல்கள் அடிப்படையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணியும், இரண்டாமிடம் பெற்ற ஒலுவில் அல் -ஹம்றா மகாவித்தியாலய அணியும் வலய மட்ட போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இறுதிப் போட்டிக்கு முன்னதாக இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணியும், அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலய அணியும் மோதியது.
இதில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணி 1 -₋ 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஒலுவில் அல் -ஹம்றா மகாவித்தியாலய அணியும், அட்டாளைச்சேனை அல்- அர்ஹம் வித்தியாலய அணியும் மோதியது.
இதில் ஒலுவில் அல் -ஹம்றா மகாவித்தியாலய அணி 1 - 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
16 வயதுப் பிரிவு ஆண்கள்
அட்டாளைச்சேனை கோட்டக் கல்வி பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வயதெல்லையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணியும், ஒலுவில் அல் -ஹம்றா மகாவித்தியாலய அணியும் விளையாடியது.
இதில் 1 -₋ 0 என்ற கோல்கள் அடிப்படையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணியும், இரண்டாமிடம் பெற்ற ஒலுவில் அல் -ஹம்றா மகாவித்தியாலய அணியும் வலய மட்ட போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதனடிப்படையில் பார்க்கின்றபோது 16 வயதுப் பிரிவிலும், 18 வயதுப் பிரிவிலும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அணியும், 20 வயதுப் பிரிவில் ஒலுவில் அல் -ஹம்றா மகாவித்தியாலய அணியும் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டிக்கான செயலாளரும், சிரேஸ்ட உடற்கல்வி ஆசிரியருமான ஏ.ஜீ.பிர்னாஸ் தெரிவித்தார்.
No comments