சிதைக்கப்பட்ட நாணய தாள்கள் பயன்பாடு கால எல்லை 31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது
பழுதடைந்த நாணயத்தாள்களை பயன்படுத்தும் கால எல்லை எதிர்வரும் 31 ஆம் முடிவடைவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சேதப்படுத்தப்பட்ட நாணயத்தாள்களை பயன்படுத்தும் கால எல்லை இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக அறிவித்திருந்தது, ஆனால் மக்களின் வேண்டுகோளை தொடர்ந்து இக்கால எல்லை மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டிருந்தது.
தன்னிச்சையாக நாணயத்தாள்களை சேதப்படுத்துவது 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணய சட்டமூலத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றம் என்பதுடன் அவ்வாறு குற்றமிழைக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.
No comments