யாழ். பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் மறுஅறிவித்தல் வரும் வரை முடக்கம்..
யாழ். பல்கலைக்கழக அனைத்து செயற்பாடுகளும் இன்று(10) முதல் முடக்கமடையும் என யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் தொழிற் சங்கங்களின் போராட்டம் தொடர்பாக நேற்று(09) விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில்,
“ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுத் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ராமநாதன் நுண்கலைப்பீட பரீட்சை திங்கட்கிழமை வரை மட்டும் நடைபெறும்.
அதனை தொடர்ந்து ராமனாதன் நுண்கலைப்பீட அனைத்து பரீட்சைகள் உட்பட ஏனைய பீடங்களின் பரீட்சைகள் மற்றும் விரிவுரைகள் என்பன மறு அறிவித்தல் வரை நடைபெறாது.
அத்துடன் ஊழியர் தொழிற் சங்கங்களின் போராட்டம் காரணத்தால், நீர் விநியோகம் உட்பட அடிப்படைத் தேவைகள் தடைப்படுவதால் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர் கொள்ள நேரிடும்.
இதனை கருத்தில் கொண்டு விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேறுவதுடன், மீண்டும் பல்கலைக்கழகங்களினது அனைத்து கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகும் போது வருகை தருவது பொருத்தமாக இருக்கும். எனவே தகவலை அனைத்து பீட மாணவர்களிடத்தும் கவனத்தில் கொண்டு வர விரும்புகின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Taken from this - http://tamil.fastnews.lk
No comments