Breaking News

211 உள்ளுராட்சி சபைகளில் தனியாட்சி . பொதுஜன பெரமுன ஏறுமுகத்தில்..

தற்பொழுது வரையில் 211 உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு முடிந்துள்ளது.

பெரும்பான்மைப் பலம் கிடைக்காத உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கையும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவற்றின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பெரிய கட்சிகளும் போட்டிபோட்டுக் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..

பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு பெரும்பான்மைப் பலத்துடன் 173 உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்ற முடிந்தது.

எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைப் பலம் கிடைக்கப் பெறாத 167 உள்ளுராட்சி சபைகளிலும் 56 சபைகளின் அதிகாரத்தை பொதுஜன பெரமுன கட்சி பெற்றுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

No comments