சிரியாவில் தொடரும் இரசாயன தாக்குதல் – 70 பேர் பலி!

சிரியாவை கிள்ர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக, இராணுவம் இரசாயன தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
சிரியா அதிபர் பஷர் அல் ஆசத்திற்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனடிப்படையில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப் போராட்டத்தில், கடந்த வருடம் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தற்போது கிளர்ச்சியாளர்களிடம் காணப்பட்ட பெரும்பாலான பகுதிகள் மீட்கப்பட்ட நிலையில், கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக உச்சகட்ட போர் நடைபெற்று வருகின்றது. இதனடிப்படையில் கிழக்கு கவுட்டா பகுதியில் உள்ள டவுமா நகரில், நேற்று இராணுவம் நடத்திய தாக்குதலில் 70 ற்கும் மேற்பட்டோர் கொல்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments