உயரம் பாய்தல் வீரர் மஞ்சுல இறுதிப் போட்டிக்கு தகுதி
அவர் 2.21 மீற்றர் தூரம் பாய்ந்து இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இறுதிப் போட்டி எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவுள்ளது.
அதேபோல் , 52 கிலோ எடைப் பிரிவு குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொண்ட இஷான் பண்டார நவூரு நாட்டு வீரர் யசீன் குக்யை வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளார்.
இதேவேளை, பதக்கப்பட்டியலில் தொடர்ந்தும் அவுஸ்திரேலிய முன்னிலையில் உள்ளது.
இதுவரையிலும் பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் அவுஸ்திரேலிய 33 தங்கம், 28 வெள்ளி மற்றும் 28 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 89 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து 20 தங்கம் 21 வெள்ளி, 14 வெண்கலம் அடங்களாக 55 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
8 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் அடங்களாக மொத்தம் 17 பதக்கங்களை பெற்றுள்ள இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
அந்த பட்டியலில் இலங்கை 18வது இடத்தில் உள்ளது.
இலங்கை இதுவரையில் 1 வெள்ளி, 2 வெண்கலம் அடங்கலாக 3 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
No comments