Breaking News

கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சிட வேண்டுமா....!

சிறிதளவு கடலை மாவை பால் ஏட்டுடன் கலந்து குழைத்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் பயிற்றம் மாவை முகத்தில் தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள்,  தேமல் ஆகியவைகள்  குறையும்.

எலுமிச்சை முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைப்பதோடு, சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். மேலும் முகத்தில் பருக்கள் மற்றும்  பிம்பிள் இருந்தாலும், அவற்றை போக்கிவிடும்.
 
தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை திட்டமான முறையில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக் குறையும்.
 
வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய ஆரம்பித்து, முகமும்  பளபளப்புடன் இருக்கும்.
 
கடலை மாவை பாலேட்டுடன் கலந்து குழைத்து இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பாக முகத்தில் பூசி வைத்திருக்க வேண்டும். பின்பு காலையில் எழுந்ததும் பயிற்றம் மாவை முகத்தில் தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தேமல்  ஆகியவைகள் குறையும்.

No comments