Breaking News

கழுத்து வலியா? கொஞ்சம் கவனியுங்கள்!

Image result for cervical pain
கணனி மற்றும் தொலைக்காட்சி முன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு நாளடைவில் கழுத்து தசை பாதிக்கப்படும்.
இதனால் அந்த இடத்தில் போதிய ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால், கழுத்து வலி ஏற்படுகிறது.
கழுத்து வலியை ஆரம்பத்தில் கவனிப்பது நல்லது, இல்லாவிடில் காலம் செல்ல கழுத்தை திருப்ப இயலாத நிலைக்கு ஆளாகலாம்.
இதயத்திலிருந்து, மூளைக்கும், மூளையிலிருந்து உடம்போட மத்த பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டு செல்லுகிற நரம்புகள், கழுத்துப் பகுதியில்தான் இருக்கிறது.
அடிபட்டாலோ, அந்த நரம்புகள்ல பாதிப்பு வந்தாலோகூட கழுத்து வலி வரலாம். சாதாரண வலி, சுளுக்குனு அதை அலட்சியப்படுத்துவது ஆபத்தானது.
வயதானர்வர்களுக்கு வரும் கழுத்து வலிக்கு, கழுத்து எலும்பு தேய்மானம் காரணமாகலாம்.
மற்றபடி, கழுத்து எலும்பிலுள்ள சிறு சந்திப்புகளில் வரக்கூடிய பாதிப்புகளால் ஏற்படும் வலிதான் பிரதான காரணம். இது சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன்ல தெரியாது. பிரத்யேகக் கண்டுபிடிப்பு முறைகள் தேவை.
கழுத்து தண்டுவடத்துல உண்டாகிற பாதிப்பும், கழுத்து எலும்பு விலகறதும் கூட கழுத்து வலிக்கான காரணமாகலாம். கழுத்து வலி சிலருக்கு பின் தலைவலியாகவோ, தோள்பட்டை வலியாகவோ, கை வலியாகவோ மாறலாம். கழுத்துக்கான சிகிச்சையைக் கொடுத்தாலே, மத்த வலிகள் குறையறதைப் பார்க்கலாம்.
சரியான காரணத்தைக் கண்டுபிடிச்சு, சரியான மாத்திரை, சிறப்புசிகிச்சைகள், கழுத்துத் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் மூலமா வலியை விரட்டலாம்.
கழுத்து வலி இருப்போர் செய்யக் கூடாதவை
* சுளுக்கு எடுக்கறதும், மசாஜ் செய்யறதும், நரம்பு பாதிப்பு, சதைத் தெறிப்பு போன்றவற்றை உண்டு பண்ணி தொடர்ச்சியான வலியையும் கொடுக்கும்.
* படுத்துக்கொண்டே தொலைக்காட்சி. பார்க்கிறது, படிக்கிறது, உட்கார்ந்துக்கிட்டே தூங்கறதெல்லாம் கூடாது.
* சுயமாக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கக் கூடாது.
செய்யக் கூடியவை
* கழுத்துத் தசைளைப் பலப்படுத்தற பயிற்சிகளை மருத்துவரோட ஆலோசனைப்படி செய்யலாம்.
* தூங்குவதற்கு 10 செ.மீ. உயரம் உள்ள தலையணை

* கணனி, மானிட்டர்(Monitor) கண்களைவிட 20 டிகிரி தாழ்வாகவும், கண்களிலிருந்து 20 இன்ச் இடைவெளி விட்டும் இருக்கணும்.

No comments