Breaking News

சுதந்திரக் கட்சியில் மகிந்த - மைத்திரி - ரணில் என மூன்று அணிகள்

Image result for prime minister of sri lanka

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிந்த அணி, மைத்திரி மற்றும் ரணில் அணி என மூன்றாக பிரிந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரணில் அணியினரான சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர ஆகியோர் பிரதமர் ரணிலுடன் அமைச்சர் பதவிகளை வகித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் பதவிகளை கைவிட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேர் கூட்டு எதிர்க் கட்சியுடன் இணைய வேண்டும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர்கள் எதிரணியில் தனித்து இயங்குவதன் மூலம் ரணில் தரப்பு பலமடையும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இவர்களால் அது முடியாது போனால், தொடர்ந்தும் அமைச்சர்களாக பதவி வகிப்பது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Taked From - http://www.tamilwin.com/politics/01/179799?ref=home-feed

No comments