வெட் வரியை நீக்க எதிர்பார்ப்பு – நிதியமைச்சர்
சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் படி நடவடிக்கை மேற்கொள்ள தாம் தயாரில்லை என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
புதிய வரிச்சட்டத்தின் மூலம் இந்த வருடத்தில் சிறந்த பலனை பெறலாம் என எதிர்பார்க்கின்றோம்.
2020 ஆம் ஆண்டளவில் 40 சதவீதமாக அதிகரிக்கப்பதே எமது நோக்கம்.
இதன் மூலம் வெட் வரியை இல்லாமல் செய்ய முடியும்.
இதனிடையே, சர்வதேச நாணய நிதியம் எமக்கு பொறுத்தமில்லாதவற்றை செய்யுமாறு வலியுறுத்தாது.
அவ்வாறு நாணய நிதியம் கூறினாலும் இதனை மேற்கொள்ள அரசாங்கம் தயாரில்லை எனவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Thanks - http://www.hirunews.lk/tamil/
No comments