வாகன உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்



கடந்த 5 வருடங்களில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளாத வாகனங்களின் பதிவினை இரத்துச் செய்வதற்கு மோட்டார் வாகன பணிப்பாளர் நாயகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண மோட்டார் போக்கு வரத்து திணைக்களத்தின் ஆணையாளர் வீ.ரவீந்திரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களுக்கும் அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த 5 வருடங்களில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளாத வாகனங்களின் பதிவினை இரத்துச் செய்வதற்கு மோட்டார் வாகனப்பணிப்பாளர் நாயகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போது பாவனையிலுள்ள வாகனங்களிற்கு வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெறாமல் இருப்பின் வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கும் அதே போன்று பாவைனையில் இல்லாத வாகனங்கள் இருப்பின் அவற்றை எதிர்காலத்தில் பாவிப்பதாயின் அதனை பிரதேச செயலகத்தில் பயன்படுத்தாமை பற்றிய அறிவித்தலை வழங்கி ஏற்கனவே செலுத்த வேண்டிய நிலுவை இருப்பின் அதனை செலுத்தி பற்றுச் சீட்டையும் மற்றும் பயன் படுத்தாமை பற்றிய பதிவினையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
25.06.2018க்கு முன்னர் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடின் தங்களின் வாகனங்களிற்கான பதிவு கொழும்பு மோட்டார் வாகனப்பணிப்பாளர் நாயகத்தினால் ரத்துச் செய்யப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments