Breaking News

Why is Prason coming? Natural medicine for that!


வாய்ப்புண் ஏன் வருகிறது? அதற்கான இயற்கை மருத்துவம்...!


 Related image

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக்  குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். 
நாளடைவில் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும். 
 
வாய்ப்புண் காரணங்கள்:
 
ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் பேக்டீரியா, புஞ்சனம், வைரஸ் இவற்றாலும் உண்டாகிறது. வைட்டமின் ‘பி’ சத்துக் குறைவாலும், இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களாலும் ஏற்படுகிறது. சிக்ரெட், பீடி புகைக்கும் பழக்கம் இருந்தாலும் வாய்ப்புண் ஏற்படும். வாய்ப்புண்கள் தொடர்ந்து நீண்ட நாட்கள் காணப்பட்டால் புற்று  நோயாக மாறவும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதனால் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும் வாயில் துர்நாற்ற்றம் ஏற்படும்.
 
ஆண்களைவிடப் பெண்களுக்கு, இந்த தொல்லை அதிகம். காரணம், பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில், ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால், வாய்ப்புண் வருகிறது.
 
தடுக்கும் வழிமுறைகள்:
 
ஜீரணக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உடல் குளிர்ச்சியாக இருக்க அதிக அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழங்களை  எடுத்துக்கொள்ளவேண்டும். பற்கள் மற்றும் வாயினை சுத்தமாக பராமரிக்கவேண்டும்.  மனஅழுத்தம் ஏற்படாதவாறு தியானம், யோகா  பயிற்சிகளை  செய்யவேண்டும்.

Image result for can canker sores pop
நெல்லிக்காய் இலைகளை வேகவைத்த நீரில், அடிக்கடி வாய்க்கொப்பளித்து வர வாய்ப்புண் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணத்தினால் வாய்க்கொப்பளிக்க புண் ஆறும். 
 
மணத்தக்காளி இலையினை வாயில் போட்டு மென்று சிறிதுநேரம் வாயிலே வைத்திருந்து விழுங்கலாம். முற்றின அதாவது கொப்பரை தேங்காயையும் பயன்படுத்தலாம். பாலில் சிறிது தேன் அல்லது பசு வெண்ணெய் தடவி வர நல்ல பலன்கிடைக்கும்.

No comments