Breaking News

இன்று அதிகாலை 2564 பேர் கைது

Image result for traffic police sri lanka
இன்று அதிகாலை நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் உட்பட 2 ஆயிரத்து 564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை மேற்கொண்ட குறித்த சுற்றிவளைப்பில், 16 ஆயிரத்து 256 காவற்றையினர் செயற்பட்டுள்ளனர்.

இதன்போது போதையில் வாகனங்களை செலுத்தியவர்கள் 504 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 720 பேர், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 741 பேர் மற்றும் போதை பொருளுடன் தொடர்புடையவர்கள் 524பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காவற்துறைமா அதிபரின் ஆலோசனையிற்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

No comments