Breaking News

மூளையில் மேற்கொள்ளப்பட்ட அபூர்வ சத்திர சிகிச்சை - படங்கள்

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
31 வயது இளைஞர் ஒருவரின் மூளையில் 1.8 கிலோ எடையளவில் உருவான ட்யூமர் கட்டியை 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர்.
உலகில் இதுவே மிகப்பெரிய மூளை ட்யூமர் கட்டியாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மும்பை நாயர் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

1.8 கிலோ எடையளவில் ஏற்பட்ட கட்டியால் சந்த்லால் பால் என்ற அந்த இளைஞருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கட்டி அகற்றப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் கண் பார்வை நல்ல முறையில் திரும்ப வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் த்ரிமூர்த்தி நட்கர்னி, "சந்த்லால்பால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவரது தலையில் இருந்து கட்டி அவரது தலையைவிடப் பெரியதாக இருந்தது. உலகில் இதுவே மிகப்பெரிய மூளைக் கட்டியாக இருக்க வேண்டும். என்னுடன் சேர்ந்து 5 மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டோம்.
சந்த்லாலுக்கு கடந்த 3 ஆண்டுகளாகவே மூளையில் கட்டி வளர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் அது மிக வேகமாக வளர்ந்திருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக 10% கட்டி மட்டுமே கபாலத்துக்குள் வளர்ந்திருந்தது. மற்றவை வெளியே வளர்ந்ததால் இந்த அறுவை சிகிச்சையை எளிதாக மேற்கொள்ள முடிந்தது.

அறுவை சிகிச்சையின்போது சந்த்லாலுக்கு 11 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. 3 நாட்கள் அவர் வென்டிலேட்டர் உதவியில் சுவாசிக்க நேர்ந்தது.

தற்போது அவர் தேறி வருகிறார். அவர் தலையில் இருந்து அகற்றப்பட்ட கட்டியின் ஒரு பகுதியை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அது மீண்டும் வளரக்கூடிய கேன்சர் கட்டியா என்பதை சோதிப்பதற்காக அனுப்பியுள்ளோம்.

கடந்த 2002-ல் கெம் மருத்துவமனையில் ஒருவருக்கு மூளையில் ஏற்பட்ட 1.4 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டது.

அதன் பின்னர் சந்த்லாலுக்கு ஏற்பட்டதே பெரிய அளவிலான கட்டியாக இருக்கிறது" எனக் கூறினார்.


Thanks Hiru news...

No comments