முத்தரப்பு டி20 தொடரின் இன்றைய போட்டியில் இந்திய, இலங்கை அணிகள் பலப் பரீட்சை.
முத்தரப்பு டி20 தொடரின் இன்றைய போட்டியில் இந்திய, இலங்கை அணிகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.
இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதும், இதில் முதல் ரவுண்ட அப் முடிந்துள்ள நிலையில், மூன்று அணிகளும் ஒரு வெற்றியுடன் சம நிலையில் உள்ளன.
இந்நிலையில் இரண்டாவது சுற்றின் முதல் போட்டியாக இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி கிட்டத்தட்ட இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் என்பதால், இரு அணிகளும் வெற்றி பெற முயற்சிக்கும்.
மேலும் முதல் போட்டியில் இந்திய அணி, இலங்கையிடம் தோல்வி கண்டுள்ளதால் அதற்கு பதிலடி கொடுப்பதற்கு தயாராக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
போட்டிகள் அனைத்தும் பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. துடுப்பாட்டத்திற்கு உகந்த உகந்த இந்த ஆடுகளத்தில் மூன்று ஆட்டங்களிலும் 2-வது துடுப்பாட்டம் செய்த அணியே வெற்றி கண்டிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சி முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments