சீக்கிரமாக உடல் எடை குறையும்! இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்
உடல் பருமன் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அதில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் இருந்து உணவுப் பழக்கங்கள் முதல் நாம் பின்பற்றும் ஒவ்வொரு செயல்களும் உடல் பருமனுக்கு காரணங்களாகிறது.
இந்த உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு ஏராளமான இயற்கை பொருட்கள் உள்ளது. அதில் ஒன்று தான் மஞ்சள்.
இந்த உடல் பருமன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு ஏராளமான இயற்கை பொருட்கள் உள்ளது. அதில் ஒன்று தான் மஞ்சள்.
எடை குறைக்க மஞ்சளை எதனுடன் பயன்படுத்துவது?
- மஞ்சள் தூள் சிறிதளவு, அதனுடன் தேன் மற்றும் மிளகுத் தூள் கலந்து அதை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் இந்த பானத்தை 1 டம்ளர் குடிக்க வேண்டும்.
- நீரில் இஞ்சி மற்றும் மஞ்சளைத் தட்டிப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்த பின் பட்டைத் துண்டு போட்டு, 2 நிமிடம் கழித்து வடிகட்டி தினமும் காலையில் குடிக்க வேண்டும்.
- 1/4 கப் மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் மிளகுத் தூள் கலந்து அதை தினமும் காலை உணவின் போது 1-2 டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.
- வெதுவெதுப்பான நீரில் சீரகத்தைப் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை 2 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் மஞ்சள் தூள் கலந்து காலை உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.
- நெல்லிக்காயின் சாறு எடுத்து அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து அதில் பாதி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும்.
- மஞ்சள் தூள், தேங்காய் பால், பட்டை தூள், மிளகுத் தூள், இஞ்சி பவுடர் மற்றும் தேன் ஆகிய அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து 3-5 நிமிடம் மிதமான தீயில் சூடேற்றி காலை உணவு உண்பதற்கு முன் தினமும் குடிக்க வேண்டும்.
No comments