பங்களாதேஸ் அணிக்கான புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் அடுத்தமாதம்
பங்களாதேஸ் கிரிக்கட் அணிக்கான புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் அடுத்தமாதம் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஸ் கிரிக்கட் சபையின் தலைவர் சஸ்முல் ஹசன் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த அணிக்கான தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்து சந்திக்க ஹத்துருசிங்க கடந்த ஆண்டு நொவம்பர் மாதம் பதவி விலகியதை அடுத்து, அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அந்த அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் கெட்னி வோல்ஸ் பயிற்சியளித்து வரும் நிலையில், சுதந்திர கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஸ் வெற்றி பெற்றிருந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் பங்களாதேஸுக்கான வாய்ப்பு காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், நாஸ்முல் ஹசன், புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளரது நியமனம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சுதந்திர கிண்ண கிரிக்கட் தொடர் நிறைவடைந்தப் பின்னர், புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளர் குறித்து தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் சுதந்திர கிண்ண கிரிக்கட் தொடரின் 4வது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வென்றும், ஒவ்வொரு போட்டியில் தோல்வி அடைந்தும் சமநிலையில் இருக்கின்றன.
இந்த நிலையில் இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
Thanks HIRU NEWS....
No comments