Breaking News

இன்ஸ்டாகிராம் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.!

Image result for instagram
இன்ஸ்டாகிராம் செயலியில் விரைவில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு சேவை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த செயலி அடுத்தக்கட்ட அம்சங்களை வழங்க தயாராகி விட்டது.
Image result for instagram
சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இன்ஸ்டாகிராம் செயலியில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையிலான தகவல்கள் ஆண்ட்ராய்டு ஆல்பா மூலம் தெரியவந்திருக்கிறது.
அழைப்பு ஐகான் மட்டுமின்றி, அழைப்புகள், வீடியோ அழைப்பு சார்ந்த விவரங்களும் இந்த செயலியில் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக பிரைவேட் சாட் விண்டோவில் நேவிகேஷன் பாரில் வீடியோ அழைப்பு அம்சம் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. குரல் மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் இன்ஸ்டாகிராம் செயலி ஸ்னாப்சாட் செயலிக்கு மாற்றாக அமைய வாய்ப்புகள் இருக்கின்றன.
ஐ.ஓ.எஸ். பதிப்பில் வீடியோ அழைப்புக்கான ஆப்ஷன்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இன்ஸ்டாகிராம் இருக்கும் நிலையில் நண்பர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள செயலியை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இனி இருக்காது. 
பேஸ்புக்கின் பல்வேறு செயலிகளில் ஏற்கனவே குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் செயலியில் குரல் மற்றும் வீடியோ அழைப்பு அம்சங்கள் வெளியாகும் காலம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

No comments