Breaking News

நாமல் ராஜபக்ஷவிற்கு ரஷ்ய விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி - படம்


விமான நிலையத்தில் சிக்கி தவித்த நாமல்!

ரஷ்யாவில் இருந்து தாம் அமெரிக்காவிற்கு பயணிக்க முயற்சித்த போது, அதிகாரிகள் அதற்கு தடை விதித்தாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமது டுவிட்டர் தளத்தில் அவர் இந்தத் தகவலை பதிவு செய்துள்ளார்.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நாமல் ராஜபக்ஷ ரஷ்யா சென்றிருந்த நிலையில், மொஸ்கோவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.
ஆனால், அவரை விமானத்தில் ஏற அனுமதிக்க வேண்டாம் என்று, அமெரிக்காவின் அதிகாரிகள் தங்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக, எமிரேட்ஸ் எயார்லைன்ஸ், நாமல் ராஜபக்ஷவிடம் தெரிவித்திருக்கிறது.
எனினும், இதற்கு சரியான காரணம் ஒன்றும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் தமது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளார்.


Thanks HIRU NEWS....

No comments