தேசிய ஒற்றுமைக்காக பரந்த அரசியல் நடவடிக்கை
இனவாதத்துக்கு எதிராக பரந்த அரசியல் நடவடிக்கை ஒன்றை உருவாக்க உள்ளதாக ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இனவாத தரப்பு மற்றும் இனவாதத்துக்கு எதிரான தரப்பு ஆகிய இரண்டு தரப்புகள் இன்று நாட்டில் உள்ளன.
எனவே, இனவாத்துக்கு எதிராக, தேசிய ஒற்றுமைக்காக பரந்த அரசியல் நடவடிக்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
அதன் பொறுப்பை ஜே.வி.பி ஏற்பதாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Thanks HIRU NEWS....
No comments