வறட்சியால் கைகளில் அடிக்கடி தோல் உரிகிறதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்…
அதிகமாக வெயிலில் சுற்றும் போதும், சருமத்தில் இறந்த செல்கள் தேங்கும் போதும், சருமத்தில் அழுக்குகள், நச்சுக்கள் சேரும் போதும், வறட்சி அதிகமாக இருக்கும் போதும், அளவுக்கு அதிகமாக சோப்பால் சருமத்தைக் கழுவும் போது, சருமத்தின் மேல் அடுக்கு கடுமையாக பாதிக்கப்படும். இதன் விளைவாக தோல் உரிந்து அசிங்கமாக காட்சியளிக்கும்.
கைகளில் தோல் உரியும் பிரச்சினையை சரிசெய்ய உதவும் சில இயற்கை ஸ்கரப்களை எப்படி தயாரித்துப் பயன்படுத்துவது என்று காண்போம்.
கல் உப்பு + பாதாம் பவுடர் + கற்றாழை ஜெல்:
ஒரு பௌலில் 2 டீஸ்பூன் கல் உப்பு, 1 டீஸ்பூன் பாதாம் பவுடர் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கைகளில் தடவி, 5-10 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவியதைத் தொடர்ந்து, தவறாமல் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

கொக்கோ வெண்ணெய்:
ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கொக்கோ வெண்ணெய், 2 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 3-4 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு கலந்து, கைகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் தேய்க்க வேண்டும். அடுத்து வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவ வேண்டும்.

கடலை மாவு , பாதாம் எண்ணெய் , ரோஸ்மேரி ஆயில்:
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 4- துளிகள் ரோஸ்மேரி ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் தோல் உரிந்து அசிங்கமாக காணப்படும் கைகளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் நீரில் கழுவுங்கள். இச்செயலால் கைகளில் உள்ள வறட்சி நீங்கி, கைகள் பட்டுப் போன்று இருக்கும்.

காபி தூள் , தேன்:
ஒரு பௌலில் 2 டீஸ்பூன் காபி தூள் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை கைகளில் தடவி, 5-10 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் கைகளைக் கழுவ வேண்டும். அதன் பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி, கைகளை லேசாக மசாஜ் செய்யுங்கள். இதனால் கைகள் மென்மையாக இருக்கும்.

No comments