இராணுவத் தளபதியின் எச்சரிக்கை
நாட்டின் ஸ்திரதன்மையை சீர்குலைக்கும் நோக்குடன் இனவாதத்தைப் பரப்பும் அடிப்படைவாதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் மகேஷ் சேனாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்காக இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு தரப்பினரின் அற்ப நோக்கங்களுக்காக நாட்டின் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலிகொடுக்க அரசாங்கம் தயாரில்லை.
அவ்வாறான அற்ப நோக்கங்களுக்காக செயற்படுபவர்களுக்கு எதிராக உயர்ந்தபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்த இராணுவம் தயாராகவுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
Thanks HIRU NEWS....
No comments