மழையுடன் கூடிய காலநிலை – காற்றின் வேகம் அதிகரிப்பு…
நாட்டின் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
மேல், தென், தென்கிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் காணப்படும் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் அந்த கடற்பகுதிகளில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதனால் அப்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும், எதிர்வரும் 48 மணித்தியாலங்கள், அந்த பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைளில் இருந்து விலகியிருக்குமாறுவளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் மீனவர்கள் மற்றும் கடற்படையினரும் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments