Breaking News

மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%2C+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நஜீம் செதியை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று இருபதுக்கு இருபது போட்டிகளில் பங்குகொள்ளும் பொருட்டே மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்கிறது.

போட்டிகள் ஏப்ரல் மாதம் முதலாம், இரண்டாம் மற்றும் 4ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த வருடம் நவம்பர் மாதம் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அது தவிர்க்கமுடியாத சில காரணங்களுக்காக பிற்போடப்பட்டது.

இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே ஒவ்வொறு வருடமும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை எதிர்வரும் 5 வருடங்களுக்கு நடத்தவும் இருநாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் கையெழுத்திட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Thanks HIRU NEWS....

No comments