பாரவூர்தி விபத்து - மூவர் காயம்
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் நேற்று இரவு பாரவூர்தியொன்று விதியை விட்டு விலகி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சேதன பசளை (சாணம்) ஏற்றிச்சென்ற பாரவூர்தி, குயின்ஸ்பெரி பகுதியில் வாகனத்தை பின்நோக்கி செலுத்தும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களை நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Thanks HIRU NEWS....
No comments