ஆனந்த சுதாகரனை மைத்திரி விடுதலை செய்வாரா ?
அரசியல்கைதி ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு அரச தலை
வருக்கும், தலைமை அமைச்சருக்கும், நீதி அமைச்சருக்கும் கருணை மனு அனுப்பியுள்ளனர்.வடக்கு மாகாண சபையின் 119ஆவது அமர்வு நேற்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
அரசியல் கைதியான சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகான சபையின் ஊடாக எழுத்துமூலமான கடிதம் ஒன்றை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அனுப்பி வைக்கவுள்ளோம்.
அரசியல் கைதியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடவுள்ளோம் என்று அவைத்தலைவர் சபையில் தெரிவித்தார்.
தேநீர் இடைவெளியின் போது உறுப்பினர்களிடம் கையொப்பங்கள் பெறப்பட்டன. உடனடியாக கடிதம் உரியவர்களுக்கு அனுப்பப்பட்டது.
தனது கணவர் வருவார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து கடைசி வரை அவரைக் காணமுடியாது நோய்வாய்ப்பட்டு அவர் உயிரிழந்தார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியாக ஆனந்தசுதாகருக்கு மகனும் மகளும் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற மனைவியின் இறுதி நிகழ்வுக்குப் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்துச் செல்லப்பட்டார். மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள மூன்று மணித்தியாலங்கள் அனுமதிக்கப்பட்டார்.
தந்தை 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் இரு குழந்தைகளும் தாயின் அரவணைப்பில் வாழ்ந்தனர். இப்போது தாயையும் இழந்துள்ளனர்.
Thanks - http://www.jvpnews.com/srilanka/04/166717
No comments