Breaking News

ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக தலைநகரில் கையெழுத்து வேட்டை

Image result for தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின்
தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, தலைநகர் கொழும்பில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று நண்பகல் இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.

நவோதயா அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்தில், அனைவரும் கலந்துகொண்டு வலுசேர்க்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2008ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் என்ற அரசியல் கைதியின் மனைவி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காலமானார்.

இவர்களுடைய பிள்ளைகள் நிர்க்கதியாகியுள்ள நிலையில், தந்தையின் அரவணைப்பின் கீழாவது இப்பிள்ளைகள் வளர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த இரண்டு வார காலமாக வடக்கு கிழக்கில் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு வருவதோடு, வடக்கு மாகாண சபையினால் ஜனாதிபதிக்கு நேற்றைய தினம் மனுவொன்றும் அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Thanks - http://www.jvpnews.com/srilanka/04/166709

No comments