Breaking News

மீண்டும் களமிறங்கியுள்ள அஜந்த மென்டிஸ்!!

மலேசியா கிரிக்கட் குழுவினரின் அழைப்பை ஏற்று இலங்கை இராணுவ கிரிக்கட் குழுவினர் மலேசியா செற்று கிரிக்கட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளது.

இதற்கான போட்டிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமானதுடன், எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இலங்கை இராணுவ கிரிக்கட் குழுவினரை பிரதிநிதிப்படுத்தும் வகையில், இலங்கை கிரிக்கட் அணியின் அஜந்த மென்டிஸ் மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் இந்த போட்டிகளில் பங்குபற்றுகின்றனர்.

இத்தகைய போட்டிகளினால் வீரர்கள் மத்தியில் சுய நம்பிக்கையை அதிகரிக்கின்றதோடு பல்வேறு போட்டிகளில் விளையாடும் திறனும் உருவாகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments