அரசியல் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரனது விடுதலை வேண்டி கையெழுத்து வேட்டை
ஆயுள் தண்டனை அரசியல் கைதியாக தீர்ப்பு வழங்கப்பட்ட சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரனது விடுதலை வேண்டி தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கையெழுத்து வேட்டை சற்றுமுன்னர் மட்டக்களப்பு பொதுச் சந்தைக்கு முன்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்தவகையில் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட சுதாகரன் தனது மனைவி சுகயீனமடைந்து கடந்த நாட்களில் உயிரிழந்தமையை அடுத்து அவரது இறுதிக்கிரியைகளுக்காக 3 மணித்தியாலங்கள் மாத்திரம் சிறைச்சாலையினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் தனது மனைவிக்கான இறுதிக்கிரியையை சரிவர முடிக்காத நிலையில் தனது இரு குழந்தைகளின் அழு குரல் மத்தியில் மீண்டும் சிறைக்குச் சென்றார் அந்தவகையில் அவரது இரு குழந்தைகளின் பரிதாபகரமான நிலையை கருத்தில் கொண்டு சுதாகரனுக்கு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வட கிழக்கு வாழ் பொது மக்கள் சமூக பொது அமைப்புக்கள் தமிழ் அரசியல்வாதிகள் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து கையெழுத்துகள் அடைங்கிய கருணை மனுக்கள் கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது அதன் பிரகாரம் புத்தாண்டு தினத்திற்கு முன்பாக விடுதலை செய்வதாக கூறப்பட்டிருப்பினும் மீண்டும் அவரது விடுதலையை வலியுறுத்தி தேசத்தின் வேர்கள் அமைப்பினரின் முயற்சியில் இன்றைய நாளில் மட்டக்களப்பு நகர்பகுதிகளில் கையெழுத்துக்கள் பெறப்பட்டு நாளைய தினம் கையெழுத்துகள் அடங்கிய கருணை மனு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Thanks - https://www.tamilcnn.lk/archives/747809.html
No comments