Breaking News

முன்புற கமெராக்களை மறைத்து வைக்கக்கூடிய ஸ்லைடர் கைப்பேசி உருவாக்கம்

Image result for Doogee லைடர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகள் சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகமாகியுள்ள போதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் இத் தொழில்நுட்பம் இதுவரை அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை.

எனினும் Doogee நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய கைப்பேசியில் இத் தொழில்நுட்பத்தினை சற்று வித்தியாசமான முறையில் பயன்படுத்தியுள்ளனர்.

அதாவது Mix 4 எனும் இக் கைப்பேசியானது முழுமையான திரையினைக் கொண்டுள்ளதுடன், முன்புற கமெரா, சென்சார், ஸ்பீக்கர் என்பவற்றினையும் கொண்டுள்ளது. இவ் வசதிகளை ஒருங்கே பயன்படுத்துவதற்காக ஸ்லைடர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கைப்பேசியின் தொடுதிரையினை மேலும் கீழுமாக அசைக்க முடியும்.

மேலும் இக் கைப்பேசியானது ஏனைய கைப்பேசிகளுடன் ஒப்பிடுகையில் சற்று தடிப்பானதாக இருக்கின்றது.

No comments