அச்சுறுத்தும் அல்சர் : இதெல்லாம் தொட்டுக்கூட பார்க்கக்கூடாது
அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளைச் சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது என்பதை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
அல்சரின் வேதனை அனுபவித்தவர்களுக்கதான் புரியும். சாப்பிட வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் சரியாகச் சாப்பிட முடியாது. வலி உயிர் போய்விடும்.
அல்சர் என்பது உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்சுவரில் உருவாகும் புண். இது பாதிக்கப்பட்டவரைப் கடுமையான வேதனைக்கு உள்ளாக்கும். ஆன்டாசிட்கள் (Antacids) அல்லது ஆன்டிபயாட்டிக்ஸ்களைப் (Antibiotics) பயன்படுத்தி இதன் பாதிப்பை குறைக்கலாம்; அல்சர் வருவதற்கான அறிகுறிகள் தெரியும்போதே தடுக்கலாம்.
அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகை உணவுகளைச் சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது என்பதை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
சாப்பிட வேண்டியவை:
# அல்சர் உள்ளவர்கள் நேரத்துக்குச் சாப்பிடவேண்டியது அவசியம்.
# நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் செரிமானத்தை சீராக வைத்திருந்து, அல்சரில் இருந்து காக்கும்.
# முட்டை, தயிர், மீன், பீன்ஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ளலாம்.
# உணவில் புதினாவைச் சேர்த்துக்கொள்ளலாம்.
# தேங்காய்ப்பால், மணத்தக்காளிக்கீரை ஆகியவை வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
#தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.
சாப்பிடக்கூடாதது:
# தொடர்ந்து மதுப்பழக்கம் உள்ள ஒருவருக்கு, பலவகை நோய்களுடன் அல்சரும் வந்து சேரும். ஏற்கெனவே அல்சர் இருப்பவர்கள் மது இருக்கும் பக்கம் திரும்பிப் பார்க்கவே கூடாது.
# காரமான உணவுகளும் அதிக மசாலா சேர்த்த உணவுகளும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். எதுக்களிப்பை ஏற்படுத்தும் என காரமான உணவுகளை தொடக்கூடாது.
# காபி குடிக்கக்கூடாது.அதற்கு பதிலாக மாதுளை ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்ற வேறு ஏதேனும் பானங்களை அருந்தலாம். இவற்றால் வயிற்றுப் புண் ஆற வாய்ப்பு உள்ளது.
# சோடா, குளிர்பானங்களையும் தொடக்கூடாது. ஏனெனில் சோடாவிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் சிட்ரிக் அமிலம், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிக்கக்கூடியது. இது செரிமானத்திலும் பிரச்னையை ஏற்படுத்தும்.
# அல்சர் உள்ளவர்கள் பால் மற்றும் பால் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சிலர் பாலைக் குடித்தால் அல்சர் குணமாகும் என நினைக்கிறார்கள். ஆனால், பால் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதில் உள்ள புரதச்சத்தும் கொழுப்புச்சத்தும் வயிற்றுப் புண்ணுக்கு ஆபத்தை உண்டாக்கும்.
No comments